ஒவ்வொரு சில்லரை விற்பனையாளரும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிகிற 4 Eko AePS சேவைகள்
#products #aeps
திரு அபிநவ் சின்ஹா அவர்களும், திரு அபிஷேக் சின்ஹா அவர்களும், 2006 ஆம் ஆண்டில் நிறுவிய, Eko இந்டியா ஃபினான்சியல் சர்வீசஸ் பி லிட் நிறுவனம், இந்தியாவில் உள்ள வங்கிய வசதி இல்லாத பிரிவினர்களுக்கு 24*7 மணி நேரமும் வங்கியச் சேவைகளை அணுகிப் பயன்பெறச் செய்வதன் நோக்கத்தைக் கொண்டுள்ளது. Eko நிறுவனம், தங்களது வங்கியச் சேவைகளுக்கு விரைவான அணுகலைத் தருவதற்காக, இந்தியாவில் இருக்கிற மிகப்பெரும் வங்கிகளோடு கூட்டணி அமைத்துச் செயல்படுகிறது. AePS சேவைகளையும், மற்ற இது தொடர்பான பல்வேறு விதமான சேவைகளையும் வழங்குவதற்காக, Eko நிறுவனத்தோடு கூட்டு சேர்வது, சில்லரை வர்த்தகர்கள் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாகிக் கொள்ள வலுப்பெறச் செய்கிறது.
ஆதார் இணைத்த பணப்பட்டுவாடா அமைப்பு (AEPS), இது ஒரு வங்கிக்குச் செல்லாமலேயே, அடிப்படையான வங்கிய மற்றும் வங்கியம் அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வழி செய்து தருகிறது. வங்கிய வசதி இல்லாத பிரிவினர், AePS வசதி வாயிலாக அருகாமையிலுள்ள சில்லரை வர்த்தகக் கடையில் இருந்தே அடிப்படையான வங்கியப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அவர்களது ஆதார் எண் மற்றும் கை ரேகையை வைத்து, வாடிக்கையாளர்களால் ஒரு வங்கியையோ அல்லது ATM-ஐயோ அணுக வேண்டிய அவசியமில்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
வங்கிகளும், ATM-களும் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் அருகில் இருப்பதைப் போன்ற நகர்ப்புறப் பகுதிகளைப் போலல்லாமல், ஊரகப் பகுதிகளில் வங்கியச் சேவைகளை விரைந்து பெற வசதியில்லை. அதுபோன்ற பகுதிகளில், பலசரக்குக் கடை, மருந்தகம், அல்லது மொபைல் ரீச்சார்ஜ் விற்பனையாளர்கள் போன்ற, உள்ளூர் சில்லரை வர்த்தகர்கள், Eko உடன் கூட்டு அமைத்துக் கொள்வதன் வாயிலாக சிறு வங்கியச் சேவைகளை வழங்க முடியும்.
Eko’வின் sAePS சேவைகள், சில்லரை வர்த்தகர்கள் தங்களது கடையை ஒரு ATM ஆக மாற்றிக் கொண்டு, அவர்களது வாடிக்கையாளர்களுக்கு, ரொக்கப் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், மற்றும் மீதத்தொகை விசாரணை என்ற விதத்தில் வங்கியச் சேவைகளைத் தர உதவுகிறது.
ரொக்கப் பணம் செலுத்துதல் §
Eko’வின் AePS சேவைகளைக் கொண்டு, சில்லரை வர்த்தகர்களால் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிறு வங்கியச் சேவைகளைத் தர முடியும். Eko வின் AePS வசதியை உபயோகித்து, மிகுந்த நடைமுறைகள் இல்லாமலேயே, வங்கிய வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் ரொக்கத்தொகை செலுத்த வசதி செய்கிறது. ஆதார் இணைத்ததோர் சேவையாக இருப்பதால், ஒரு வாடிக்கையாளர் பணத்தை செலுத்துவதற்குத் தர வேண்டியதெல்லாம், அவர்களது ஆதார் எண்ணையும், விரல் ரேகையையும் கொடுப்பதேயாகும். வங்கிய வசதியில்லாத ஊரகப் பகுதிகளில் இருக்கிற சில்லரை வர்த்தகர்கள், இது போன்ற மதிப்புக்கூட்டிய சேவைகளை வழங்கி, அதிக வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதற்குத் தூண்டுகோலாக அமையலாம்.
ரொக்கத்தொகை எடுத்தல் §
Eko’வின் AePS Cashout வசதியை உபயோகித்து, வாடிக்கையாளர்கள் ரொக்கத் தொகை எடுத்துக் கொள்ளச் செய்யவும், சில்லரை வர்த்தகர்கள் இந்த வசதியை உபயோகிக்கலாம். Eko Connect வாயிலாக ரொக்கத்தொகை எடுக்கும் இந்த நடைமுறை மிக எளிதானதாகும், ஏனென்றால், இதைச் சரிபார்ப்பதற்கு வாடிக்கையாளரின் ஆதார் எண்ணும், விரல் ரேகையும் மட்டுமே அவசியமாகிறது.
பணம் பரிமாற்றம் §
சில்லரை வர்த்தகர்கள் இந்த வசதியை உபயோகித்து, Eko’வின் Send Cash வசதியைக் கொண்டு, Eko Connect வசதியை உபயோகித்து, வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். AePS கீழ் செய்யும் மற்ற ஒவ்வொரு பரிவர்த்தனையையும் போலவே, உள்நாட்டுப் பணப் பரிமாற்றமானது, ஒரு எளிதானதும், திறம்பட்டதுமானதோர் வசதியாகும், இது வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் விரல் ரேகையைக் கொண்டே பணம் பரிமாற்றம் செய்ய வழி செய்கிறது.
மீத விசாரணை §
AePS வசதியைத் தெரிவு செய்து கொள்வதன் வாயிலாக, சில்லரை வர்த்தகர்களால், வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்குகளில் இருக்கிற மீதத்தொகையைப் பார்த்துக்கொள்ளவும் உதவ முடியும். வாடிக்கையாளர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதி வரைக்குமான கணக்கு விவரங்களை கண்காணித்து வைப்பதற்கு, சிறு கணக்கு அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட்டுக் கொள்வதற்கான வசதியும் இருக்கிறது.
எனக்கு (சில்லரை வர்த்தகர்) என்ன பலன் கிடைக்கும்? §
Eko வாயிலாகச் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், Eko Connect இல் பதிவு செய்துள்ள சில்லரை வர்த்தகர்கள் நல்லதோர் தரகுத்தொகையைச் சம்பாதிக்க முடியும். உடனடியாக பதிவுசெய்யப்பெறுதல் மற்றும் அதே நாளில் கணக்குத் தீர்த்தல் ஆகிய வசதி கொண்டு, Eko’வின் AePS வசதி, சில்லரை வர்த்தகர்கள் அதிக தொடர்ச்சியான வாடிக்கையாளர்களைப் பெறவும், அதிக வருமானத்தைச் சம்பாதிக்கவுமானதோர் அற்புதமான வழியாகும்.
இதற்கும் மேலாக, எங்களது Eko கூட்டாளிகள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவின் அங்கமாகி, வங்கிய வசதி இல்லாத ஊரகப் பகுதிகளில் தங்கியிருப்பவர்கள், சிக்கலில்லாத ஒரு விதத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்துக் கொள்ள உதவி அவர்களை வலுப்படுத்துகிறார்கள். Eko -வைக் கொண்டு, சில்லரை வர்த்தகர்கள் அரசின் நிதி உட்சேர்ப்புத் திட்டத்திலும், Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) திட்டத்திலும், அரசிற்கு உதவ முடியும், இத்திட்டங்கள், பணம் செலுத்துதல், காப்பீட்டு, கடன், ஓய்வூதியம் போன்றவை அடங்கிய நிதிச் சேவைகளைக் கட்டுபடியாகிற செலவில் பெற்றுப் பயனுற விரிவாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளது.
Eko நிறுவனம், ஏற்கெனவே, எவ்விதமாக சில்லரை வர்த்தகர்களும், வங்கிய வசதி இல்லாதவர்களும், ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள் என்பதில் வித்தியசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, சில்லரை வர்த்தகர்கள், கூடுதல் வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்திருக்கிறது. இத்தகைய அடிப்படையான வங்கியச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, சில்லரை வர்த்தகர்களால், மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்ற மாதாந்திரப் பயன்பாட்டுச் செலவுகளுக்குப் பணம் செலுத்தவும் Eko வை உபயோகித்துக் கொள்ள முடியும்.
இந்தியாவின் மிகவும் நம்பகமான நிதிச் சேவைகளோடு சேர்ந்து, டிஜிட்டல் இந்தியாவின் ஓர் அங்கமாகுங்கள். Eko’வின் AePS வசதி கொண்டு, அதிகம் சம்பாதிக்க உங்கள் கதவைத் திறந்திடுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு, AePS சேவைகளை வழங்க ஆரம்பிக்க, Eko Connect-ஐப் பதிவிறக்கம் செய்ய, உடனே பதிவு செய்திடுங்கள். இன்னும் அதிக விவரங்களுக்கு, தயவுசெய்து 8448444380 எண்ணை அழைத்திடுங்கள் அல்லது https://eko.in/products/aadhaar-banking இணைய பக்கம் சென்று பாருங்கள்.
All Posts